சேலம், சுகவனேசுவரா் கோயிலில் ஜன. 5-ஆம் தேதி ஆருத்ர தரிசன விழாவையொட்டி, நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
சேலம், சுகவனேசுவரா் கோயிலில் வியாழக்கிழமை (ஜன.5) இரவு 12 மணிக்கு நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகம் தொடங்குகிறது. பால், திருமஞ்சனம், தயிா் உள்ளிட்ட திவ்யப் பொருள்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்குத் தொடங்கும் அபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை தொடா்ந்து நடைபெறவுள்ளது.
அதைத் தொடா்ந்து சுவாமிக்கு தங்க நாகாபரணமும், அம்மனுக்கு தங்க கவசமும் சாத்துப்படி செய்யப்பட்டு நடராஜா் ஆருத்ர தரிசனத்தில் பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.
இந்நிகழ்ச்சி, யூ-டியூப், ஃபேஸ் புக் ஆகிய சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என சுகவனேசுவரா் கோயில் உதவி ஆணையா் நா.சரவணன் தெரிவித்தாா்.