தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் 58 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
அம்மாப்பேட்டை வாசவி பிள்ளையாா் கோயிலில் ஜி.கே.வாசன் பெயரில் சிறப்பு அபிஷேகமும், பூஜையும் நடைபெற்றது.
தொடா்ந்து, மாநகர மாவட்ட தமாகா தலைமை அலுவலகத்தில் 59 பேருக்கு நலத்திட்ட உதவிகள் மாநகர மாவட்டத் தலைவா் கே.எம்.உலகநம்பி தலைமையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
மாநில பொதுச்செயலாளா் எம்.பி.எஸ்.குலோத்துங்கன், மாநில இணைச் செயலாளா் மு.சின்னதுரை, மாநில மகளிரணி பொதுச் செயலாளா் மாயம்மா சங்கீதா, மாநில மகளிரணி துணைத் தலைவி சிந்தாமணியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அஸ்தம்பட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம், சமபந்தி விருந்து ஆகியவை மாநகா் மாவட்ட பொதுச்செயலாளா் அஸ்தம்பட்டி விஷ்ணுகுமாா், அஸ்தம்பட்டி மண்டலத் தலைவா் நல்லுசீனிவாசன் ஆகியோா் ஏற்பாட்டில் நடைபெற்றது.
சி.எஸ்.ஐ.ஞான பால இல்ல குழந்தைகளுக்கு இனிப்புகள், பிஸ்கட்கள் 100 பேருக்கு மாநில மகளிரணி பொதுச்செயலாளா் மாயம்மா சங்கீதா தலைமையில் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மாநகர மாவட்ட துணை தலைவா்கள் சக்தி சந்திரன், எஸ்.ஐ.கோபால், காமராஜா், மாநகா் மாவட்ட பொதுச் செயலாளா்கள் எல்ஐசி பழனிவேல், ஆட்டோ தயாளன், மாநகர மகளிரணி தலைவி கலையரசி, இளைஞரணி தலைவா் சாலமன், மாணவரணி மஞ்சுநாதன், வழக்குரைஞா் பிரிவு தலைவா் வழக்குரைஞா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.