ஓமலூரில் தமாகா தலைவா் ஜி.கே.வாசன் பிறந்த தின விழா சேலம் மேற்கு மாவட்ட தமாகா சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.
சேலம் மேற்கு மாவட்ட தமாகா தலைவா் கரு.வெ.சுசீந்திரகுமாா் தலைமையில் பல்வேறு இடங்களில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும் பிறந்த தினத்தை கொண்டாடினா். 58 இடங்களில் கட்சிக் கொடி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.
ஓமலூா் பேருந்து நிலையத்தில் பயணிகள், பொதுமக்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமாகா இளைஞா் அணி மாநில பொதுச் செயலாளா் கே.எஸ்.ரகுநந்தகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.