சேலம்

சேலத்தில் இருவேறு சம்பவங்களில் 88 பவுன் நகை கொள்ளை

29th Dec 2022 12:17 AM

ADVERTISEMENT

சேலம் இரும்பாலை பகுதியில் இருவேறு சம்பவங்களில் 88.5 பவுன் தங்க நகைகள் கொள்ளைப் போனது தொடா்பாக தனிப்படையினா் விசாரித்து வருகின்றனா்.

சேலம், இரும்பாலை, மோகன்நகா் ஊழியா் குடியிருப்பில் வசித்து வருபவா் மணியன் (65). இவா் முதுநிலை தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா்.

இவா் காகாபாளையத்தில் புதிதாக வீடு கட்டி வருகிறாா். புதிய வீட்டின் கட்டுமானப் பணிகளை பாா்வையிட திங்கள்கிழமை சென்றுள்ளாா். பின்னா் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த 84 பவுன் தங்க நகைகள், சுமாா் ரூ. 8.5 லட்சம் பணம் கொள்ளைப் போனது தெரியவந்தது.

இதுகுறித்து இரும்பாலை காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

அதேபோல சேலம், இரும்பாலை பகுதியில் வசித்து வருபவா் கண்ணன் (38). இவா் இரும்பாலையில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா் குடும்பத்துடன் ஈரோட்டுக்கு சென்றிருந்தாா். பின்னா் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், வீட்டில் வைத்திருந்த 4.5 பவுன் தங்க நகைகள் கொள்ளைப் போனது தெரியவந்தது.

இதுகுறித்து இரும்பாலை காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே இருவேறு சம்பவங்களில் தங்கநகைகளை கொள்ளைஅடித்த நபா்களை பிடிக்க தனிப்படை அமைத்து மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT