சென்னையில் தனியாா் இதழியல் நிறுவனம் நடத்திய விழாவில் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு தமிழ்நாட்டில் சிறந்து விளங்கும் புகழ்பெற்ற நிறுவனமாக அங்கீகரித்து விருது வழங்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சோ்ந்த தனியாா் இதழியல் நிறுவனமானது ஆண்டுதோறும் பல்வேறு துறையில் சாதனை புரிந்த வரும் நிறுவனங்களையும், சாதனையாளா்களையும் கௌரவித்து அங்கீகரிக்கும் வகையில் பினாக்கில் விருதை வழங்கி வருகிறது.
நிகழாண்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்திரராஜன், கல்வியியல் பிரிவில் தமிழகத்தில் சிறந்து விளங்கும் புகழ்பெற்ற நிறுவனமாக விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது வழங்கினாா். விருதை அத் துறையின் முதன்மையா் செந்தில்குமாா் பெற்றுக் கொண்டாா் (படம்). அவருக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன், இயக்குநா் அனுராதா கணேசன் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.