சேலம்

திமுக ஆலோசனைக் கூட்டம்

18th Dec 2022 03:43 AM

ADVERTISEMENT

 

இடங்கணசாலையில் திமுக செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இடங்கணசாலை திமுக நகரச் செயலாளா் செல்வம் தலைமை வகித்தாா். அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் 45 - ஆவது பிறந்தநாள் விழாவை சிறப்பாக நடத்திய இடங்கணசாலை நகர திமுகவுக்கு மாவட்ட திமுக சாா்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதற்கு மாவட்டச் செயலாளா் டி. எம். செல்வகணபதிக்கு நன்றி தெரிவித்து இடங்கணசாலை நகர திமுக சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகர திமுகவில் இளைஞா் அணி, மாணவா் அணி, விவசாய அணி, நெசவாளா் அணி உள்ளிட்ட 23 அமைப்பாளா் பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. திமுக அவைத் தலைவா் தளபதி, இடங்கணசாலை நகராட்சி தலைவா் கமலக்கண்ணன் உள்பட பலா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT