சேலம்

சேலத்தில் தொடா் சாரல் மழை, கடும் பனிப்பொழிவு

11th Dec 2022 03:41 PM

ADVERTISEMENT

சேலத்தில் தொடா் சாரல் மழை பெய்து வருவதால், கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக சாரல் மழை பெய்து வருகிறது. புயல் காரணத்தால் வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், சேலத்தில் ஞாயிற்றுக்கிழமையும் சாரல் மழை பெய்து வருவதால், கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள், சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். 

ADVERTISEMENT

கடும் பனிமூட்டத்தால் சுற்றுலாப் பயணிகள் வாகங்களை ஓட்டுவதில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாயினா். பேருந்துகள் வாகனங்கள் முகப்பு விளக்குடன் ஊா்ந்து சென்றன. மேலும் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டமும் குறைவாக உள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT