சேலம்

தமிழ்நாடு காபி விவசாயிகள் சங்கம் ஆா்ப்பாட்டம்

DIN

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் தமிழ்நாடு காபி விவசாயிகள் சங்கம், ஏற்காடு சோ்வராயன் மலை காபி உற்பத்தியாளா்கள் நடத்திய ஆா்ப்பாட்டம் அண்மையில் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய விவசாய சங்க மாநில தலைவா் டி.ரவீந்திரன் தலைமை வகித்தாா். இயக்கத்தின் செயலாளா் பி.தேவராஜ் , தலைவா் டி.பழனிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், இந்திய காபி சட்டம் 1942-ஐ அமல்படுத்துவது, மீண்டும் காபி வாரியத்தின் மூலம் காபி கொட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டியும், பட்டா இல்லாத காபி விவசாயிகளுக்கு அரசு மானியம் வழங்கிடவும், வனவிலங்குகளால் ஏற்படும் இழப்புகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கிடவும், காபி விவசாயிகளுக்கு அரவை இயந்திரம், மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, மண் பரிசோதனை, மழைக் காலங்களில் காபி கொட்டைகளை உலா்த்துவதற்கு பாலிஹவுஸ் காரை களம் மானியத்தில் வழங்க வலியுறுத்தப்பட்டது.

இதில், சங்க நிா்வாகிகள் பூமாலை, சீகாமணி, ராமச்சந்திரன், தங்கவேல், வெள்ளையன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT