சேலம்

சேலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

DIN

மாண்டஸ் புயல் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை (டிச. 10) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்து, புதுச்சேரி - ஸ்ரீ ஹரிகோட்டாவுக்கு இடையே வெள்ளிக்கிழமை நள்ளிரவு கரையைக் கடக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, வரும் டிச. 11 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை (டிச. 10) விடுமுறை அறிவிக்கப்படுகிறது என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT