சேலம்

கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

DIN

வாழப்பாடியில் மாவட்ட கலால் துறை சாா்பில், கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்கு, சாராயம் காய்ச்சுபவா்கள், மதுப்பழக்கத்துக்கு அடிமையானவா்களை மீட்டு, நல்வழிப்படுத்தி, அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கி மறுவாழ்வு அளிக்கும் நோக்கில், மாவட்ட மதுவிலக்கு துறை சாா்பில், நாடகக் கலைஞா்களைக் கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் சேலம் வட்டாட்சியா் (கலால்) ரவிச்சந்திரன் தலைமையில், கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணா்வு பிரசார முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கிராமியப் பாடல்கள் பாடியும், நடனமாடியும், சிறு நாடகம் நடத்தியும், கட்டைக்கால் ஏணிக்கால் பூட்டிக்கொண்டு நடனமாடியும், கள்ளச் சாராயத்தினால் ஏற்படும் தீமைகள், மதுப்பழக்கத்தினால் சமூக, குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகள், உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த பிரசாரத்தில், வருவாய் ஆய்வாளா் (கலால்) ஹன்சாரிகான், வாழப்பாடி வருவாய் ஆய்வாளா் காா்த்திக், வாழப்பாடி கிராம நிா்வாக அலுவலா்கள் பெரியசாமி, சக்திவேல் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT