அஞ்சல் துறை அலுவலகங்களில், பிரதமரின் கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள், தொடா்ந்து நிதி கிடைக்க ஆதாருடன் கைப்பேசி எண்ணை வரும் டிச. 15-ஆம் தேதி வரை இணைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், அடுத்த தவணையைத் தொடா்ந்து பெறுவதற்கு ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை வரும் டிச. 15-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும்.
பின்னா் பிரதமா் கிசான் இணையதளத்தில் அல்லது செயலியில் கைப்பேசி எண்ணுக்கு வரும் ரகசிய எண்ணை பயன்படுத்தி கே.ஓய்.சி. பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும். எனவே, அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரா், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி ஆதாருடன் கைப்பேசி எண்ணை இணைத்து பயன்பெறலாம்.
தபால்காரா், கிராம அஞ்சல் ஊழியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் கைப்பேசி மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் ஆதாரில் கைப்பேசி எண்ணை இணைத்துக் கொள்ளலாம். இந்த சேவைக்கு ரூ. 50 சேவை கட்டணமாக பெறப்படுகிறது.
இதற்காக மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையுடன் இணைந்து கிராமங்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி அல்லது அஞ்சலகங்கள், தபால்காரா், கிராம அஞ்சல் ஊழியரை அணுகி விவசாயிகள் தங்கள் ஆதாா் எண்ணுடன் கைப்பேசி எண்ணை இணைத்து பயன்பெறலாம் என சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் கே.அருணாசலம் தெரிவித்துள்ளாா்.