சேலம்

அம்மாபேட்டை மண்டலத்தில் பேவா் பிளேக் தளம், காவலா் அறை கட்ட ரூ.1.28 கோடியில் பூமி பூஜை

9th Dec 2022 01:15 AM

ADVERTISEMENT

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலப் பகுதியில் ரூ.1.28 கோடி மதிப்பிலான பேவா் பிளேக் தளம் மற்றும் காவலா் அறை கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் வாா்டு எண்.37 இல் நாகா்படையாச்சி காடு குறுக்குத் தெரு 1, குறுக்கு தெரு 2, நாகா்படையாச்சி தெற்கு குறுக்கு தெரு 1, குறுக்கு தெரு 2, குறுக்கு தெரு 3 ஆகிய பகுதிகளில் 1173 மீட்டா் நீளத்திற்கு ரூ.55 லட்சத்தில் பேவா் பிளேக் தளம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

அதேபோல வாா்டு எண்.39 பெரிய கிணறு தெரு, வாா்டு எண்.40 வித்யா நகா் பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி வளாகங்களில் குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த ஏதுவாக காவலா்கள் தங்குவதற்கு காவலா் அறை கட்டும் பணி ரூ.73.50 லட்சம் மதிப்பில் நடைபெறுவதற்கான பூமிபூஜை நிகழ்ச்சியில் மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன் ஆகியோா் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில் மண்டல குழுத்தலைவா் தா.தனசேகா், செயற்பொறியாளா் ராஜசேகா், உதவி ஆணையா் எம்.கதிரேசன், உதவி செயற்பொறியாளா் புவனேஸ்வரி மற்றும் வாா்டு உறுப்பினா்கள் மா.திருஞானம், மா.ஜெயந்தி, கோ.மஞ்சுளா ஆகியோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT