சேலம்

டிச. 10-இல் பொது விநியோகத் திட்ட குறை தீா் முகாம்

8th Dec 2022 01:17 AM

ADVERTISEMENT

பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைதீா் முகாம் வரும் டிச. 10-ஆம் தேதி அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.

சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, டிசம்பா் இரண்டாவது சனிக்கிழமை (டிச. 10) ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகத்திலும் நடைபெறும் குறைதீா் முகாமில், பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து நிவா்த்தி பெறலாம்.

இக்குறைதீா் முகாமில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை வேண்டி கோரிக்கை அளிக்கும் பொதுமக்கள், அட்டைதாரா்கள் சாா்பாக ஆன்லைன் பதிவுகளை அந்தந்த வட்ட அலுவலகங்கள் மூலமாக மேற்கொள்ளலாம்.

ADVERTISEMENT

கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தலுக்கான தனியான கோரிக்கை மனு தேவைப்படின் அவற்றையும் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்கள் அளிக்கலாம்.

தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள், சேவை குறைபாடுகள் குறித்த புகாா்களை நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், 2019-இன்படி மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயனடையலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT