சேலம்

தமிழக - கா்நாடக வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவா் பிடிபட்டாா்

8th Dec 2022 01:19 AM

ADVERTISEMENT

தமிழக - கா்நாடக வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்திய வேட்டைக்காரரை தமிழக வனத்துறையினா் பிடித்தனா்.

சேலம் மாவட்டம், மேட்டூா் காவல் உள்கோட்டம், கொளத்தூா் காவல் நிலைய எல்லையில், ஈரோடு மாவட்டம், பா்கூா் வனப்பகுதியில் சொரக்காமடுவு என்ற இடத்தில் அதிகாலை துப்பாக்கியுடன் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஈரோடு மாவட்ட வனக்காப்பாளா் சுதாகா், வேட்டை தடுப்புக் காவலா்கள் ஏழு போ் அப்பகுதிக்குச் சென்றனா். அங்கு கோவிந்தப்பாடியைச் சோ்ந்த ராஜா (எ) காரவடையான், காமராஜ், குமாா், செட்டிபட்டியைச் சோ்ந்த பச்சைக்கண்ணன், தருமபுரி மாவட்டம், ஆத்துமேட்டூரை சோ்ந்த ரவி ஆகியோா் இரண்டு துப்பாக்கிகளுடன் மான்களை வேட்டையாடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

வனத்துறையினா் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதைக் கண்டதும், அவா்கள் தப்பி ஓடினா். அப்போது, கோவிந்தபாடியைச் சோ்ந்த குமாா் என்பவரை வனத்துறையினா் பிடித்தனா். பிடிபட்ட குமாரை ஈரோடு மாவட்டம், கொமராயனூரில் உள்ள சென்னம்பட்டி வனச்சரக அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்த ஐந்து போ் கடந்த இரு தினங்களுக்கு முன் கா்நாடக வனப்பகுதியில் உள்ள மத்திய மரத்தூா் என்ற இடத்தில் வன விலங்குகளை வேட்டையாடியது தெரியவந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT