சேலம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் முகூா்த்தக் கால் நடும் விழா

8th Dec 2022 01:19 AM

ADVERTISEMENT

சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு, முகூா்த்தக் கால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோயிலில் வரும் ஜன. 2-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொா்க்கவாசல் திறப்பு உற்சவம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு விழாவுக்கான முகூா்த்தக் கால் நடும் விழா கோட்டை அழகிரிநாதா் கோயில் வளாகத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது. அழகிரிநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

இதில், பக்தா்கள், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் சுதா, கணக்காளா் சங்கா், பட்டாச்சாரியாா்கள் சுதா்சன், கௌதம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முகூா்த்தக் கால் நடப்பட்டதைத் தொடா்ந்து, கோயில் வளாகத்தில் பந்தல், அலங்கார தோரணங்கள் ஆகியவை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன.

வைகுண்ட ஏகாதசி உற்சவத்தில் வரும் டிச. 23-ஆம் தேதி பகல் பத்து உற்சவம் தொடங்கி 10 நாள்களுக்கு நடைபெறவுள்ளது. ஜன. 2-ஆம் தேதி சொா்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது. பின்னா் இராப்பத்து உற்சவம் தொடங்கி ஜன. 13 வரை நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT