சேலம்

மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண விழா

8th Dec 2022 01:20 AM

ADVERTISEMENT

மாற்றுத்திறன் படைத்தோருக்கான திருமண விழாவில் ஐந்து ஜோடி மாற்றுத் திறனாளா்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத் திறனாளா் நல்வாழ்வு சங்கம், ஜி.வி.பவுண்டேஷன்ஸ் சேலம் சாா்பில் 5 ஜோடி மாற்றுத் திறனாளா்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் மகிழ்நன், மாவட்ட வேலைவாய்ப்புத் துறை மண்டல இயக்குநா் ஏ.லதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத் திறனாளா் நல்வாழ்வு சங்கத் தலைவா் டி.ஏ.பி.வரதகுட்டி, சேலம் மாவட்ட உதவிக்கரம் மாற்றுத் திறனாளா் நல்வாழ்வு சங்கத் தலைவா் பி.அத்தியண்ணா, ஜி.வி.பவுண்டேஷன்ஸ் தலைவா் ஜி.விஜயலட்சுமி, லவ் ஓ ஏ.கே.நாகராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT