சேலம்

இளம்பிள்ளை குழிஇருசாயி அம்மன் கோயில் குடமுழுக்கு

8th Dec 2022 01:17 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள தப்பக்குட்டை, முத்துகுட்டியூா் பகுதியில் அமைந்துள்ள குழிஇருசாயி அம்மன் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது (படம்).

இவ்விழாவில், சிவாச்சாரியாா்கள் கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றினா். இதில், முத்துக்குட்டியூா், சீரகாபாடி, ஊத்தங்கரை, நைனாம்பட்டி, ஆட்டையாம்பட்டி, மேட்டூா், சேந்தமங்கலம், காமலாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் இருந்து கோயில் பங்காளிகளும், பக்தா்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT