சேலம்

பூலாம்பட்டி பகுதியில் மின் தடை

7th Dec 2022 03:07 AM

ADVERTISEMENT

எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் உள்ள துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள நிலையில், நாளை அப்பகுதியில் மின் விநியோகம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எடப்பாடி கோட்ட பொறியாளா் தமிழ்மணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பூலாம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா், பில்லுக்குறிச்சி, வன்னிய நகா், வலையசெட்டியூா், கள்ளுக்கடை, சித்தூா், வெடிக்காரன் பாளையம், குஞ்சாம்பாளையம், வெள்ளரி வெள்ளி, கல்லபாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடகம், பூமணியூா், பொன்னம்பாளையம் மற்றும் புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT