சேலம்

சேலத்தில் ராம்கோ சிமென்ட் புதிய உலா் கலவை ஆலை தொடக்கம்

7th Dec 2022 03:03 AM

ADVERTISEMENT

சேலத்தை அடுத்த வாழப்பாடி அருகே ராம்கோ சிமென்ட்ஸின் புதிய உலா் கலவை ஆலை தொடங்கப்பட்டுள்ளது.

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் தனது விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தென்னிந்தியா முழுவதும் புதிய உற்பத்திப் பிரிவுகளை தொடங்கி வருகிறது. அந்த வகையில், சேலத்தில் புதிதாக உலா் கலவை ஆலையை தொடங்கியுள்ளது.

இந்த ஆலை பல்வேறு தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டுமானத்துக்கு தேவையான பல்வேறு வகை உடனடி உலா் கலவை சிமென்ட் வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

சேலம் உலா் கலவை ஆலை முழுவதும் தானியங்கி பிரிவாகும். சிமென்ட் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருள்கள் சுமாா் 100 கி.மீ. சுற்றளவில் கிடைப்பதால், சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கிறது. மூலப் பொருள்களை சேமித்து வைக்க தேவையான தொட்டிகள், உயா் மதிப்புடைய நிலக்கரி உலா்த்தும் அமைப்பு, வடிகட்டிகள் ஆகியவை மூலம் தூசு ஏற்படாமல் தடுக்க முடியும். இதுதவிர ஆலையில் உற்பத்தியாகும் சிமென்ட் கலவைகளை பரிசோதனை செய்து அனுப்ப அதிநவீன ஆய்வகம் செயல்படுகிறது என ராம்கோ சிமென்ட்ஸ் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT