சேலம்

சாலை விபத்து: கணவன், மனைவி பலி

7th Dec 2022 03:05 AM

ADVERTISEMENT

மகுடஞ்சாவடியில் நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே வேலகவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் (57), விசைத்தறி உரிமையாளா். இவா் தனது மனைவி சூரியகலாவுடன் (47), காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கொங்கணாபுரத்தில் உள்ள பழனி கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சென்றாா். மகுடஞ்சாவடி மேம்பாலம் அருகே சென்ற போது, பின்னால் வந்த மினி லாரி இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா்களை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனா். இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT