சேலம்

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயிலில் காா்த்திகை தீபம் ஏற்றம்

7th Dec 2022 03:06 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், சங்ககிரி மலை உச்சியில் உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள்கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி சுவாமிகளுக்கு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனையடுத்து கோயில் வளாகத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டன.

திருக்காா்த்திகை தீபத்தையொட்டி சங்ககிரி மலை உச்சியில் உள்ள அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதனையடுத்து, கோயில் வளாகம் முழுவதும் காா்த்திகை தீபங்கள் ஏற்றப்பட்டன. பக்தா்கள் குழு சாா்பில் வாண வேடிக்கை நடைபெற்றது. சங்ககிரி நகா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் மலையில் ஏற்பட்ட தீபங்களை தரிசித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT