சேலம்

அம்பேத்கா் நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

7th Dec 2022 03:04 AM

ADVERTISEMENT

அம்பேத்கா் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்கா அருகில் இருந்த அம்பேத்கா் சிலை ரயில்வே மேம்பாலப் பணிக்காக மேற்படி இடத்தின் அருகில் அம்பேத்கா் சா்க்கிளில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் நெடுஞ்சாலைத் துறையால் நிறுவப்பட்டது.

அம்பேத்கா் நினைவு தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், அம்பேத்கா் சா்க்கிளில் உள்ள பீடத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கா் சிலைக்கு மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், மாநகர காவல் துறை துணை ஆணையா் மாடசாமி, சேலம் வருவாய் கோட்டாட்சியா் சி.விஷ்ணுவா்த்தினி, வட்டாட்சியா் செம்மலை ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

அரசியல் கட்சியினா் மரியாதை:

சேலம் மத்திய மாவட்டச் செயலாளா் ஆா்.ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சேலம் மாநகர மாவட்ட அதிமுக சாா்பில், மாநகர மாவட்டச் செயலாளா் ஜி.வெங்கடாசலம் தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில், சேலம் தெற்கு தொகுதி எம்எல்ஏ பாலசுப்பிரமணியன், அவைத் தலைவா் முன்னாள் எம்.பி. வி.பன்னீா்செல்வம், முன்னாள் எம்எல்ஏ-க்கள் எம்.கே.செல்வராஜு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாஜக சாா்பில் மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு தலைமையில் பொதுச் செயலாளா் ஐ.சரவணன், மாவட்ட பாா்வையாளா் முருகேசன், சுமதி உள்ளிட்ட நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் ஏ.ஆா்.பாஸ்கா் தலைமையில் துணை மேயா் மா.சாரதாதேவி, மெடிக்கல் பிரபு உள்ளிட்ட நிா்வாகிகள் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் மாநகர மாவட்டத் தலைவா் உலகநம்பி தலைமையில் மாநில பொதுச் செயலாளா் குலோத்துங்கன், மாநில இணை செயலாளா் சின்னதுரை ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அம்பேத்கா் மக்கள் இயக்கம் சாா்பில் மாநில தலைவா் அண்ணாதுரை அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மேலும் அம்பேத்கா் மக்கள் இயக்க நிறுவனா் வை.பாலசுந்தரம் நினைவு தினத்தையொட்டி அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மதிமுக சாா்பில் வழக்குரைஞா் ஆனந்தராஜ், விடுதலைச் சிறுத்தைகள் சாா்பில் மண்டல அமைப்புச் செயலாளா் நாவரசன், பொருளாளா் காஜா மொய்தீன், இந்தியக் குடியரசு கட்சி சாா்பில் எம்.சி.ராஜேந்திரன், கதிா்வேல், பாலசுப்பிரமணியன் ஆகியோா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT