சேலம்

பேக்கரியில் இருந்த சிலிண்டரில் தீ: தீயணைப்புத் துறையினரால் பெரும் விபத்து தவிர்ப்பு

6th Dec 2022 08:46 AM

ADVERTISEMENT

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பேக்கரியில் எரிவாயு உருளையில் கசிவு காரணமாக தீ விபத்து  நேரிட்டது. கடையிலிருந்து வாடிக்கையாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எடப்பாடி தீயணைப்புத் துறை வீரர்கள் உயிரை பணயம் வைத்து தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்ப்பு.

இதையும் படிக்க.. கார் டயரில் பதுக்கப்பட்ட ரூ.93 லட்சம் பறிமுதல்: எப்படி கண்டுபிடித்தது காவல்துறை?

ADVERTISEMENT

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளாண்டிவலசு பகுதியில் வேலு என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக பேக்கரி நடத்தி வருகிறார். இந்த நிலையில் பேக்கரிக்கு தேவையான இனிப்பு, காரம் உள்ளிட்ட உணவு பொருள்கள் தயாரித்துக் கொண்டிருந்த போது எரிவாயு சிலிண்டரில் இருந்து கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

இதன் காரணமாக பேக்கரியில் இருந்த வாடிக்கையாளர்களும் ஊழியர்களும் அலறி அடித்துக் கொண்டு பேக்கரியை விட்டு வெளியே ஓடி விட்டனர்.

இத்தகவல் அறிந்த எடப்பாடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். பேக்கரியில் இருந்த பல ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தது மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து எடப்பாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

எடப்பாடி தீயணைப்புத் துறை வீரர்கள் உயிரை பணயம் வைத்து எரிவாயு சிலிண்டரில் பற்றிய தீயை அணைத்ததால், மக்கள் நடமாட்டம் மிகுந்த நெடுஞ்சாலை பகுதியில் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT