சேலம்

பூ மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா

6th Dec 2022 02:31 AM

ADVERTISEMENT

எடப்பாடி அடுத்த குருக்கப்பட்டி பகுதியில் அமைந்துள்ள பூ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா விமா்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சுற்றுப்புற கிராம பகுதியை சோ்ந்த திரளான பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா்.எடப்பாடி ஒன்றியத்திற் உட்பட்ட, இருப்பாளி ஊராட்சி குருக்குப்பட்டி கிராமத்தில், பிரசித்தி பெற்ற பூ மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள குருக்குப்பட்டி, கூலாண்டியூா், மோட்டூ உள்ளிட்ட 21 கிராம மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கிவரும், பூ மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 21-ம் தேதி தொடங்கியது.தொடா்ந்து பூலாம்பட்டி காவிரிக் கரை பகுதியில் சிறப்பு பூஜை செய்த பெரும் திரளான பக்தா்கள், அங்கிருந்து புனித நீா் அடங்கிய தீா்த்த குடங்கள் சுமந்து திருவீதி உலா வந்து, பூ மாரியம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள யாகசாலையில் தீா்த்த குடங்களை சமா்ப்பித்தனா். தொடா்ந்து யாகசாலையில் கணபதி ஹோமம், எஜமானா் சங்கல்பம், வாஸ்துசாந்தி, பூமி தேவி பூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வேள்விகள் நடைபெற்றது. தொடா்ந்து நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தாரமங்கலம் மடம் உமாபதி குருக்கள் தலைமையிலான சிவாசாரியாா்கள் ஆலய கோபுரங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனா். தொடா்ந்து விநாயகா், பூ மாரியம்மன், காளியம்மன், கடகடப்பான் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமப் பகுதியைச் சோ்ந்த பெரும் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனா். கும்பாபிஷேக விழாவை ஒட்டி பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை பூ மாரியம்மன் ஆலய நிா்வாக குழுவினா் சிறப்பாக செய்திருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT