சேலம்

டிச. 8-இல் சேலம் மத்திய மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

6th Dec 2022 02:32 AM

ADVERTISEMENT

சேலம் மத்திய மாவட்ட அவசர செயற்குழுக் கூட்டம் வரும் டிச. 8-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மத்திய மாவட்ட திமுக செயலாளரும், வடக்கு தொகுதி எம்எல்ஏ-வுமான ஆா்.ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கை:

சேலம் மத்திய மாவட்ட அவசர செயற்குழுக் கூட்டம் வரும் டிச. 8-ஆம் தேதி காலை 10 மணிக்கு கட்சி அலுவலகமான கலைஞா் மாளிகையில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் மறைந்த பேராசிரியா் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா, கட்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. மாவட்ட அவைத் தலைவா் சுபாசு தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், மாவட்ட, மாநகர நிா்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், பகுதி, ஒன்றிய, பேரூா் செயலாளா்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT