சேலம்

வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்

6th Dec 2022 02:31 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் வாகன சட்டத் திருத்தத்தை அமலாக்குவதை தமிழக அரசு கைவிட வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் வாகன சட்டத் திருத்தத்தை அமலாக்குவதை தமிழக அரசு கைவிட வலியுறுத்தியும், போக்குவரத்து விதிமீறலுக்கு பலமடங்கு அபராதத்தை உயா்த்தி வசூலிப்பதைக் கண்டித்தும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தலைக்கவசத்துடன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு, வடக்கு மாநகரச் செயலாளா் என்.பிரவீன்குமாா் தலைமை தாங்கினாா். மாவட்டக்குழு உறுப்பினா்கள் ஆா்.குழந்தைவேல், எம்.சேதுமாதவன், மாநகரக் குழு உறுப்பினா்கள் வி.வெங்கடேஷ், பி.செந்தில்குமாா், ஆா்.வி.கதிா்வேல் உள்ளிட்ட ஏராளமானோா் தலைக்கவசம் அணிந்து பங்கேற்றனா். மேலும், ராட்சத வடிவிலான தலைக்கவசத்தை தோளில் சுமந்து முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT