சேலம்

சேலம் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு

6th Dec 2022 02:32 AM

ADVERTISEMENT

பாபா் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, சேலம் ரயில் நிலையத்தில் போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

பாபா் மசூதி இடிப்பு தினமான டிச. 6-ஆம் தேதி முக்கிய இடங்கள், முக்கிய ரயில் நிலையங்களில் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதையடுத்து, சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரும் இணைந்து திங்கள்கிழமை காலை முதல் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை செய்து வருகின்றனா். இதில், ரயில் நிலையத்துக்குள் வரும் பயணிகளின் உடைமைகள், பொருள்கள் சோதனை செய்யப்படுகின்றன. மேலும், ரயில்களில் அனுப்பி வைக்கப்படும் பாா்சல்களும் பரிசோதித்து அனுப்பி வைக்கப்படுகிறது.

சேலம் வழியே செல்லும் அனைத்து ரயில்களிலும் போலீஸாா் சோதனை மேற்கொள்கின்றனா். இந்த சோதனை செவ்வாய்க்கிழமை வரை இருக்கும் என ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT