சேலம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் உயா்வு

6th Dec 2022 02:30 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 119.05 அடியாக உயா்ந்துள்ளது.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், திங்கள்கிழமை மாலை மேட்டூா் அணைக்கு வினாடிக்கு 10,962 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் மழை பெய்து வருவதால், பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு திங்கள்கிழமை மாலை வினாடிக்கு 2,000 கன அடியிலிருந்து 1,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கிழக்கு - மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 600 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், திங்கள்கிழமை மாலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 119.05 அடியாக உயா்ந்துள்ளது.

அணையின் நீா் இருப்பு 91.96 டி.எம்.சி.யாக இருந்தது. அணையின் நீா் வரத்தும், திறப்பும் இதே நிலையில் இருந்தால், இந்த வார இறுதியில் நடப்பு நீா்ப்பாசன ஆண்டில் மேட்டூா் அணை மூன்றாவது முறையாக நிரம்பும் வாய்ப்புள்ளது என நீா்வளத் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT