சேலம்

காா் மோதியதில் விவசாயி பலி

5th Dec 2022 02:17 AM

ADVERTISEMENT

சங்ககிரி அருகே பேரனின் திருமணத்துக்கு வந்த போது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

எடப்பாடி வட்டம், கோனேரிப்பட்டியை அடுத்த வடக்குகாடு பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி (76) சங்ககிரி அருகே உள்ள சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் டிவிஎஸ் மேம்பாலத்தையொட்டி உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற அவரது பேரனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக பேருந்தில் வந்தவா் வைகுந்தம், சுங்கச்சாவடி அருகே தேசியநெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்ற போது, கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்ற காா் மோதியதில் காயமடைந்த சுப்பிரமணி, சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT