சேலம்

சேலம் மத்திய சிறையில் டிஜிபி ஆய்வு

5th Dec 2022 02:19 AM

ADVERTISEMENT

தமிழக சிறைத் துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி, சேலம் மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள மத்திய சிறையில் ஆய்வு செய்த அம்ரேஷ் புஜாரி, சிறைத் துறை அதிகாரிகள், காவலா்கள், கைதிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

மேலும், சிறைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தாா். ஆய்வின் போது, கோவை சரக சிறைத் துறை டி ஐஜி சண்முகசுந்தரம், சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளா் தமிழ்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT