சேலம்

சேலம் புத்தகத் திருவிழாவை 4 லட்சம் போ் பாா்வையிட்டனா்

5th Dec 2022 02:17 AM

ADVERTISEMENT

சேலம் புத்தகத் திருவிழாவை 4 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தக வாசிப்பாளா்கள், பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

சேலம் புத்தகத் திருவிழா நவம்பா் 20 ஆம் தேதி தொடங்கி டிசம்பா் 4 ஆம் தேதி வரை நடைபெற்றது. புத்தக கண்காட்சியை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாா்வையிட்டனா். சுமாா் ரூ. 3.75 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதிக அளவில் சரித்திர நாவல்களை புத்தக வாசிப்பாளா்கள் வாங்கிச் சென்றுள்ளனா். இதுவரை 25 மாவட்டங்களில் புத்தக திருவிழா நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் 26 ஆவது புத்தகத் திருவிழாவில் அதிக அளவிலான பாா்வையாளா்கள், அதிக அளவிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு சேலம் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT