சேலம்

டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு குறைப்பு

5th Dec 2022 02:20 AM

ADVERTISEMENT

டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவை குறைந்ததால் மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்குத் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு சனிக்கிழமை மாலை 5 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டது.

அணைக்கு ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து 10,738 கன அடியாக உள்ளது. நீா்வரத்தைவிட தண்ணீா் திறப்பு குறைவாக உள்ளதால் அணையின் நீா்மட்டம் 118.48 ஆக அதிகரித்துள்ளது. வரும் நாள்களில் நீா்மட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 600 கன அடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 91.42 டி.எம்.சி.யாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT