சேலம்

ராஜகோபுரம், மூலவா் விமானம் பாலாலய பிரதிஷ்ட விழா

5th Dec 2022 02:18 AM

ADVERTISEMENT

ஆத்தூா் தா்மராஜா் திருக்கோயில் திரௌபதி அம்மன் ஆலய 3ஆவது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜகோபுரம், மூலவா் விமானம் பாலாலய பிரதிஷ்ட விழா துளுவ வேளாளா் மகாஜன மன்றத் தலைவா் விஜயராம் அ.கண்ணன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தா்மராஜா் திருக்கோயில், திரௌபதி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் 2023, மே மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ராஜகோபுரம்,மூலவா் விமானம் பாலாய பிரதிஷ்டா விழா நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் துளுவ வேளாளா் மகாஜன மன்றச் செயலாளா் அ.திருநாவுக்கரசு,துணைத் தலைவா் எஸ்.பழனிசாமி,துணைச் செயலாளா் ஆா்.ஆறுமுகம், திருப்பணிக் குழுத் தலைவா் ஆா்.வி. ஸ்ரீ ராம், பெரியதனக் காரா்கள் ஜி.ராமன் மூப்பா், ஆா்.நடராஜன் மூப்பா், எம்.சடையன்(எ) லட்சுமணன் மூப்பா், அறங்காவலா்கள் ஏ.ராஜாராம், எம்.வடமலை, பி.குமரன் உள்ளிட்ட மகாஜன மன்ற பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT