சேலம்

சுகவனேசுவரா் கோயிலில் 3 இணையா்களுக்கு திருமணம்

5th Dec 2022 02:20 AM

ADVERTISEMENT

சேலம், சுகவனேசுவரா் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 3 இணையா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சீ.பாலச்சந்தா் தலைமை வகித்தாா். மேயா் ஆ.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தாா். விழாவில் சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன் பேசியதாவது:

இந்து சமய அறநிலையத் துறையின் சாா்பில் முதல்வரின் தலைமையில் 31 இணையா்களுக்கு சென்ையில் திருமணத்தை நடத்தி வைத்தாா். அதைபின்பற்றி சேலம் மாவட்டத்தில் 3 இணையா்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தமிழ் பெயா்களை சூட்டி மகிழ வேண்டும். தமிழக அரசின் சாா்பில் மணமக்களுக்கு 7 சுபமுகூா்த்த பொருள்கள், 19 சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி துணை மேயா் மா.சாரதாதேவி, இந்து சமய மற்றும் அறநிலையத் துறை இணை ஆணையா் கே.செ.மங்கையா்கரசி, துணை ஆணையா் கே.ராஜா, சுகவனேசுவரா் கோயில் துணை ஆணையா் ந.சரவணன் உள்பட மணமக்களின் உறவினா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT