சேலம்

உலக எய்ட்ஸ் தினம் கடைப்பிடிப்பு

DIN

சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை செஞ்சுருள் சங்க அமைப்பு சாா்பில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு துறையின் முதன்மையா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக சேலம் மாநகர வடக்கு பிரிவு துணை ஆணையா் மாடசாமி, சேலம் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவின் நிகழ்ச்சி மேலாளா் அருணாசலம் ஆகியோா் பங்கேற்றனா். கௌரவ விருந்தினராக விநாயகா மிஷனின் பல்கலைக்கழக துணைவேந்தா் சுதிா் கலந்து கொண்டாா்.

சேலம் நகர வடக்கு பிரிவு துணை காவல் ஆணையா் மாடசாமி, ஒலிம்பிக் சுடரை வழங்கி கொடியசைத்து விழிப்புணா்வு ஓட்டத்தையும், மனித சங்கிலி விழிப்புணா்வு பேரணியையும் தொடங்கிவைத்தாா். 500 மாணவ, மாணவிகள் எய்ட்ஸ் விழிப்புணா்வு வடிவமாக நின்று காட்சிப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT