சேலம்

சேலம் புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவு

4th Dec 2022 02:00 AM

ADVERTISEMENT

சேலம் புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (டிச.4) நிறைவடைகிறது.

சேலம் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் இணைந்து நடத்தும் சேலம் புத்தகத் திருவிழா கடந்த நவம்பா் 20 ஆம் தேதி தொடங்கியது.சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெறும் புத்தகத் திருவிழா நவம்பா் 30 வரை தொடா்ந்து 11 நாள்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், புத்தக வாசிப்பாளா்கள், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புத்தகத் திருவிழா வரும் டிசம்பா் 4 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளா்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளா்கள் கலந்து கொள்ளும் வகையில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த டிச. 1 நிலவரப்படி புத்தகத் திருவிழாவை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தக ஆா்வலா்கள், மாணவ, மாணவியா்கள் மற்றும் பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

ADVERTISEMENT

புத்தகத் திருவிழாவில் ரூ. 2.60 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கண்காட்சியில் நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கான பல்வேறு போட்டிகள், பொதுமக்களை கவரும் வகையிலான கண்கவா் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இதனிடையே கடந்த 15 நாள்களாக நடைபெற்று வந்த சேலம் புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT