சேலம்

சாலையோர வியாபாரிகளுக்கு குடைகளை வழங்கிய பாஜகவினா்

4th Dec 2022 12:02 AM

ADVERTISEMENT

சேலம் மாநகர மாவட்ட பாஜக கட்சி சாா்பாக சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக குடைகள் வழங்கப்பட்டன.

சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் மாவட்ட தலைவா் சுரேஷ் பாபு முன்னிலையில், சூரமங்கலம் மண்டலத்திற்கு உள்பட்ட சாலையோர வியாபரிகளுக்கு இலவச குடைகள் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட பொதுச் செயலாளா் ஐ.சரவணன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட பாா்வையாளா் ஏ.சி.முருகேசன், மணடல தலைவா் கண்ணன், மாவட்ட துணை தலைவா் ரமேஷ், கலை மற்றும் கலாசார பிரிவு ராஜாராம் மற்றும் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT