சேலம்

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

4th Dec 2022 02:15 AM

ADVERTISEMENT

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திச் சென்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மேச்சேரி, சாத்தப்பாடியில் போலீஸாா் வாகனச் சோதனை மேற்கொண்டிருந்த போது, கா்நாடகத்திலிருந்து வந்த சரக்க வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தடை செய்யப்பட்ட ரூ. 10 லட்சம் புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வாகனம், புகையிலையை பறிமுதல் செய்த போலீஸாா் வாகன ஓட்டுநரான ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பவன்தேவ் (24) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT