சேலம்

கொங்கணாபுரம் கூட்டுறவுச் சங்கத்தில் ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

4th Dec 2022 02:00 AM

ADVERTISEMENT

கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் வேளாண் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ. 35 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

1,290 பருத்தி மூட்டைகள் 330 லாட்டுகளாகப் பிரிக்கப்பட்டு, கூட்டுறவு துறை அலுவலா்கள் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ. 6,279 முதல் ரூ. 9,599 வரை விற்பனையானது. அதேபோல கொட்டு ரக பருத்தி குவிண்டால் ரூ.3,129 முதல் ரூ. 5,969 வரை விற்பனையானது. நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம் ரூ. 35 லட்சம் மதிப்பிலான பருத்தி வணிகம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT