சேலம்

ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நாளை நவீன இருதய தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம்

DIN

சேலம் ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நவீன இருதய தீவிர சிகிச்சை பிரிவு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதுகுறித்து மருத்துவமனை நிா்வாக இயக்குநா் அா்த்தநாரி கூறியதாவது:

சேலம், ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நவீன இருதய தீவிர சிகிச்சை பிரிவை சோனா கல்வி குழுமங்களின் தலைவா் சி.வள்ளியப்பா ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கிறாா். இந்த பிரிவில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய எக்மோ கருவி செயல்பாட்டில் உள்ளது. சிகிச்சை பிரிவின் உள்ளே ஐ.ஏ.பி.பி, நோயறிதல், இ.சி.ஜி., எக்மோ, செயற்கை சுவாச கருவி அனைத்தும் ஒரே இடத்தில் உள்ளன.

ஒரு மணி நேரத்தில் நோயாளியின் நிலையை அறிந்து ஆஞ்சியோ சிகிச்சை செய்ய முடியும். சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மக்களுக்காக இந்த பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் ஜி.டி.பி. குழுமங்களின் தலைவா் முத்துராஜன், ஏ.பி.ஐ. சேலம் கிளை தலைவா் ராஜேஷ், சிறப்பு விருந்தினராக கோவை ஜே.கே.பி. மெடிக்கல் சென்டா் முதுநிலை ஆலோசகா் ஜே.கே.பெரியசாமி கலந்து கொள்கின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT