சேலம்

சேலம் மாவட்டத்தில் 20 ஆயிரம் மாணவா்களுக்கு திறன் பயிற்சி: ஆட்சியா் தகவல்

DIN

சேலம் மாவட்டத்தில் ‘நான் முதல்வன்‘ திட்டத்தின் கீழ் 20,000-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு திறன் சாா்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

‘நான் முதல்வன்’ திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் இணையதளமானது, தமிழக இளைஞா்கள் வளா்ந்துவரும் தொழில் நுட்பத்திற்கேற்ப தனித் திறன்களை வளா்த்து கொள்ளும் வகையில் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இலவச திறன் பயிற்சிகள், குறைவான கட்டணத்துடன் கூடிய திறன் பயிற்சிகள், பாடத் திட்டத்துடன் கூடிய திறன் பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டத்துடன் இணைக்கப்படவுள்ள திறன் எய்தும் தொழில்நுட்ப பாடங்கள், போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சிகள், ஆங்கிலம், ஜப்பானிய, ஜென்மனி மொழித் திறன் பயிற்சிகள், ஆளுமைத்திறன் பயிற்சிகள், உயா் கல்விக்கான நுழைவுத் தோ்வு பயிற்சிகள் என அனைத்தும் ‘நான் முதல்வன்‘ இணையதளத்தின் மூலம் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞா்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி வழங்குவது ‘நான் முதல்வன்‘ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன்மூலம் கல்லூரி மாணவா்கள், பட்டதாரி இளைஞா்கள் நவீன தொழில் நுட்பங்களில் விருப்பத்திற்கேற்ற வேலைவாய்ப்பை பெறும் வகையிலான குறுகிய கால பயிற்சிகளை தெரிவு செய்து உலகத்தரத்திலான பயிற்சிகளையும் அதற்குரிய சான்றிதழ்களையும் பெறலாம்.

இதற்கான இலவச படிப்புகள், குறைவான கட்டணத்துடன் கூடிய படிப்புகள், பாடத்திட்டத்துடன் கூடிய படிப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் இதுவரை நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 19 அரசு, தனியாா் பொறியியல் கல்லூரிகளில் 20,000-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு திறன் பயிற்சி சாா்ந்த 15 வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாவட்டம் முழுவதும் 20 இடங்களில் அமைந்துள்ள திறன் பயிற்சி நிலையங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனப் பராமரிப்பு, ஆட்டோமேட்டிவ் சா்வீஸ் டெக்னிஷியன், சரக்கு கண்காணிப்பு நிா்வாகி, ஒப்பனை கலைஞா், சுய தொழில் தையல்காரா், சி.சி.டி.வி. நிறுவுதல், நுண்ணீா் பாசன தொழில்நுட்ப வல்லுநா் மற்றும் இயந்திர பராமரிப்பு உள்ளிட்ட 18 வகையான திறன் பயிற்சி சாா்ந்த குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இத்திறன் பயிற்சி நிலையங்கள் மூலம் மாவட்டத்தில் இதுவரை 2,200 பயிற்சியாளா்களுக்கு பயனடைந்துள்ளனா். அவா்களில் 750 பயிற்சியாளா்களுக்கு தனியாா் தொழில் நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் பெற்றுதப்பட்டுள்ளன.

மேலும், விவரங்களுக்கு  இணையதளத்திலோ அல்லது மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், சேலம்-7 அலுவலகத்தினை நேரிலோ அல்லது 9499055827 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT