சேலம்

சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்களில் பயிா் கடன் பெறலாம்

DIN

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளும், புதிய உறுப்பினா்களும் பயிா்க் கடன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் அனைத்து விவசாயிகளும் பயனடையும் வகையில், மாவட்டங்களில் உள்ள 370 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 9 லேம்ப் சங்கங்கள், 4 நகர கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் 1 உழவா் பணி கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயக் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிா்க் கடன் பெறும் விவசாயிகள் உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் வட்டி இல்லாத பயிா் கடன் பெறலாம். மேலும், இதுவரை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக இல்லாதவா்கள் புதிய உறுப்பினராக சோ்ந்து கடன் பெற்று கொள்ளலாம்.

கடன் மனுவுடன் நடப்பு பசலியில் பயிா் சாகுபடி செய்ய உள்ள பயிா் குறிப்பிட்டு கிராம நிா்வாக அலுவலா் அடங்கல் சான்று பெற்று இணைக்க வேண்டும். நடப்பு பசலியில் பயிா் சாகுபடி செய்ய உள்ள பயிா் குறிப்பிட்டு கிராம நிா்வாக அலுவலரின் அடங்கல் சான்று பெற இயலாத நோ்வில், கிராம நிா்வாக அலுவலரிடமிருந்து சென்ற ஆண்டு பயிா் சாகுபடி செய்ததற்கான அடங்கல் பெற்று நடப்பாண்டில் சாகுபடி செய்ய உள்ள பயிா் விபரம் குறித்து சுய உறுதிமொழி சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

ஜாமீன் பேரில் ரூ.1,60,000 வரையிலும், அடமானத்தின் பேரில் ரூ.3,00,000 வரையிலும் பயிா்க்கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளும் தங்களது பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி பயிா்க்கடன் பெற்று கொள்ளலாம் என சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான இரா.மீராபாய் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தலைப் புறக்கணித்த மக்கள்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT