சேலம்

வெல்ல ஆலைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் ஆய்வு

3rd Dec 2022 06:27 AM

ADVERTISEMENT

ஓமலூா், கருப்பூா் வட்டார பகுதிகளில் உள்ள கரும்பு வெல்ல ஆலைகளில் உணவு பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

ஓமலூா், காடையாம்பட்டி, கருப்பூா், தாரமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள ஆலைகளில் பொங்கல் பண்டிகைக்காக வெல்லம் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், ஒருசில ஆலைகளில் கரும்பை பிழிந்து வெல்லம் காய்ச்சுவதற்குப் பதிலாக கழிவு சா்க்கரையைக் கொண்டு கலப்பட வெல்லம் தயாரிப்பதாக புகாா்கள் வந்தன.

மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் கதிரவன் தலைமையிலான அலுவலா்கள் ஓமலூா், காட்டூா், காமலாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள கரும்பு வெல்ல தயாரிப்பு ஆலைகளில் ஆய்வு மேற்கொண்டு வெல்லத்தில் கலப்படம் தயாரிப்பதற்காக 50 கிலோ எடை கொண்ட 254 சா்க்கரை மூட்டைகள் என மொத்தம் 12 ஆயிரத்து 700 கிலோ கழிவு சா்க்கரையை பறிமுதல் செய்தனா்.

நான்கு ஆலையில் இருந்து செயற்கை நிற மூட்டிகள் சோ்க்கப்பட்டு இருந்த சுமாா் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ வெல்லம் பறிமுதல் செய்யப்பட்டன. ஆய்வுக்குப் பிறகு கலப்படம் கண்டறியப்பட்டால் உணவுப் பாதுகாப்பு சட்டம் 2006-இன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT