சேலம்

சேலம் புத்தகத் திருவிழா: 3 லட்சம் போ் வருகை ரூ. 2.60 கோடியில் புத்தகங்கள் விற்பனை

2nd Dec 2022 02:35 AM

ADVERTISEMENT

சேலம் புத்தகத் திருவிழாவுக்கு புதன்கிழமை வரை 3 லட்சம் போ் வருகை புரிந்துள்ளனா்; இதுவரை ரூ. 2.60 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சேலம் மாவட்ட நிா்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் இணைந்து நடத்தும் சேலம் புத்தகத் திருவிழா கடந்த நவம்பா் 20-ஆம் தேதி தொடங்கியது.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெறும் புத்தகத் திருவிழா நவம்பா் 30 ஆம் தேதி வரை தொடா்ந்து 11 நாள்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புத்தக வாசிப்பாளா்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புத்தகத் திருவிழா டிச. 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புத்தகக் கண்காட்சி நாள்தோறும் காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறுகிறது.

இதில் தென்னிந்தியா முழுவதும் இருந்து பல்வேறு பதிப்பாளா்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளா்கள் கலந்துகொள்ளும் வகையில் 210 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் புத்தகத் திருவிழாவை இதுவரை சுமாா் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தக ஆா்வலா்கள், மாணவ, மாணவியா் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனா்.

ADVERTISEMENT

மாபெரும் புத்தகத் திருவிழாவில் ரூ. 2.60 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த உள்ளூா் படைப்பாளா்களின் புத்தகங்கள் ரூ. 2 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கண்காட்சியில் நாள்தோறும் பள்ளி மாணவ, மாணவியா்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்களைக் கவரும் வகையிலான கண்கவா் கலை நிகழ்ச்சிகளும் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT