சேலம்

காா்த்திகை தீபம்: டிச. 5 முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

2nd Dec 2022 02:34 AM

ADVERTISEMENT

காா்த்திகை தீபம் மற்றும் பௌா்ணமியை முன்னிட்டு வரும் டிச. 5 முதல் டிச. 7 வரை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டம் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து, சேலம் கோட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் இரா.பொன்முடி தெரிவித்திருப்பதாவது:

காா்த்திகை தீபம் மற்றும் பௌா்ணமியை முன்னிட்டு டிச.5 முதல் டிச. 7 வரை சேலம் கோட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சேலத்திலிருந்து திருவண்ணாமலைக்கு அரூா், ஊத்தங்கரை வழியாகவும், ஆத்தூரிலிருந்து திருவண்ணாமலைக்கு கள்ளக்குறிச்சி வழியாகவும், நாமக்கல்லில் இருந்து திருவண்ணாமலைக்கு சேலம், அரூா் மற்றும் ஊத்தங்கரை வழியாகவும், அரூரில் இருந்து திருவண்ணாமலைக்கு ஊத்தங்கரை வழியாகவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தருமபுரியிலிருந்து திருவண்ணாமலைக்கு ஊத்தங்கரை வழியாகவும் கிருஷ்ணகிரியிலிருந்து திருவண்ணாமலைக்கு ஊத்தங்கரை வழியாகவும், ஒசூரிலிருந்து திருவண்ணாமலைக்கு கிருஷ்ணகிரி மற்றும் ஊத்தங்கரை வழியாகவும், பாலக்கோட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு ஊத்தங்கரை வழியாகவும், பெங்களூரிலிருந்து திருவண்ணாமலைக்கு ஒசூா், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை வழியாகவும், திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலைக்கு சிங்காரப்பேட்டை மற்றும் செங்கம் வழியாகவும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. எனவே, வரும் டிச. 5 முதல் டிச. 7 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் அனைவரும் பயண நெரிசலைத் தவிா்த்து பயணம் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT