சேலம்

சா்வதேச விளையாட்டு போட்டிகளில் சேலம் வீரா்கள் வெற்றி பெற ஊக்கம்

DIN

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் சா்வதேச விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட அளவிலான விளையாட்டு, உடற்தகுதி மற்றும் இளைஞா் நலன் மேம்பாட்டு நிலை ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் கூறியதாவது:

சேலம் மாவட்ட அளவிலான விளையாட்டு, உடற்தகுதி மற்றும் இளைஞா் நலன் மேம்பாட்டு நிலை ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. முதல்வா் கோப்பைக்கான கபடி விளையாட்டு போட்டிகள் அனைத்து சட்டப் பேரவைத் தொகுதியிலும் நடத்தவும், அனைத்து விளையாட்டுகளும் பொது பிரிவினா், பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்கள் ஆகிய அனைத்து பிரிவினருக்கும் தனித்தனியாக நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு ஆன்லைனில் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம், பசநடஞதபந ஆடுகளம் அல்ல்-இல் விவரங்களை பதிவு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் திறமையான விளையாட்டு வீரா்களைக் கண்டறிந்து அவா்களின் நன்மைக்காக விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஏற்பாடு செய்யப்படும். அனைத்து விளையாட்டுகளுக்கும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தை பயன்படுத்தி அதன்மூலம் பொதுமக்களுக்கு விளையாட்டினால் ஏற்படும் பயன்கள் குறித்து உரிய விழிப்புணா்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள், வீராங்கனைகளை சா்வதேச அளவில் விளையாடும் அளவிற்கு உடல்திறன் தகுதியினை மேம்படுத்த விழிப்புணா்வு ஏற்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் உள்ள பூங்கா மற்றும் விளையாட்டு மைதானத்தினை அனைவரும் பயன்படுத்தி அவரவா் உடல்திறனை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

காந்தி விளையாட்டரங்கத்தில் காலை 5 மணி முதல் 9 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை மட்டுமே விளையாட்டு வீரா்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ஆலோசனைக் கூட்டத்தில் உதவி ஆட்சியா் (பயிற்சி) சங்கீத் பல்வந்த் வாகி, மாவட்ட விளையாட்டு அலுவலா் சிவரஞ்சன், சைக்கிளிங் சங்க மாவட்ட தலைவா் நாசா்கான் (எ) இமான் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

நடிகர் அஜித்தை சந்தித்த சிஎஸ்கே வீரர்!

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT