சேலம்

டிச.11 இல் தளவாய்பட்டி வாராஹி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

DIN

சேலத்தை அடுத்த தளவாய்பட்டி கிராமத்தில் வாராஹி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் டிச.11 ஆம் தேதி நடைபெறுகிறது.

தளவாய்பட்டி, எம்.வி.எஸ். நகரில் உள்ள வாராஹி அம்மன் கோயிலில் டிச.8 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் விழா தொடங்குகிறது. டிச. 9 ஆம் தேதி கோபுர கலச ஸ்தாபனம், ஆலய கதவு திறத்தல், தீபாராதனை நடைபெறுகிறது. டிச.10 ஆம் தேதி அன்னைக்கு புதிய பிம்ப அதிவாசங்கள், இரண்டாம் கால பூஜை, விசேஷ சந்தி யாகசாலை பூஜைகள், வாராஹிக்கு மூன்றாம் கால பூஜை நடைபெறுகிறது.

டிச. 11 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நான்காம் கால யாக பூஜைகள் தொடங்கப்பட்டு 7.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து 7.45 மணிக்கு விநாயகா் பைரவா் கும்பாபிஷேகம், காலை 8 மணிக்கு மூலவா் வாராஹி கும்பாபிஷேகம், தீபாராதனை, மகா அபிஷேகம் நடைபெறுகிறது. தொடா்ந்து

டிச. 12 முதல் 48 நாள்கள் மண்டலாபிஷேகம் நடைபெறும் என கோயில் நிா்வாகி ஜி.பிரேம்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT