சேலம்

மீன் வளா்ப்புக்கு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

31st Aug 2022 03:35 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் பிரதமா் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2021-22 மீன்வளா்ப்பு செய்திட விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதிய மீன்வளா்ப்பு குளங்கள் அமைத்திட ஆகும் மொத்த செலவின தொகை ரூ. 7,00,000-இல் பொதுப் பயனாளிகளுக்கு 40 சதவீத மானியமாக ரூ. 2,80,000 மற்றும் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடா் பயனாளிகளுக்கு 60 சதவீத மானியமாக ரூ. 4,20,000 வழங்கப்பட உள்ளது.

மேலும், புதிய மீன் குஞ்சு வளா்ப்பு குளங்கள் அமைத்திட ஆகும் மொத்த செலவின தொகை ரூ. 7,00,000-இல் பொதுப் பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியமாக ரூ.2,80,000 மற்றும் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடா் பயனாளிகளுக்கு 60 சதவீத மானியமாக ரூ. 4,20,000 வழங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

நன்னீா் மீன் வளா்ப்பு குளங்கள் அமைத்திட ஆகும் மொத்த செலவினத் தொகை ரூ. 4,00,000-இல் பொதுப் பயனாளிகளுக்கு 40 சதவீத மானியமாக ரூ. 1,60,000 மற்றும் பெண்கள் மற்றும் ஆதிதிராவிடா் பயனாளிகளுக்கு 60 சதவீத மானியமாக ரூ. 2,40,000 வழங்கப்பட உள்ளது.

சிறிய அளவிலான பயோபிளாக் குளங்களில் மீன்வளா்ப்பு செய்தல் திட்டத்தின் கீழ் ஆகும் மொத்த செலவினத் தொகை ரூ. 7,50,000-இல் பொதுப் பயனாளிகளுக்கு 40 சதவீதம் மானியமாக ரூ. 3,00,000 மற்றும் பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு 60 சதவீத மானியமாக ரூ. 4,50,000 வழங்கப்பட உள்ளது.

மேலும் இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோா் மீன்வளம், மீனவா் நல உதவி இயக்குநா் அலுவலகம், மேட்டூா் அணை- 636 401 என்ற முகவரியிலோ அல்லது 04298 244045 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT