சேலம்

பால் பொருள்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர தனிசட்டம் இயற்றக் கோரி தீா்மானம்

31st Aug 2022 03:47 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் உற்பத்தியாகும் பால், பால் பொருள்களை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கம் தீா்மானம் நிறைவேற்றி உள்ளது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கம் மற்றும் அனைத்து மாவட்ட கால்நடை மருத்துவா்கள் நலச் சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் தலைவா் இரா.ராஜேந்திரன், பொருளாளா் கே.ராமசாமி கவுண்டா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

ஆவின் பால் கொள்முதல் விலை உயா்வாக பசும்பால் லிட்டருக்கு ரூ.42-ம், எருமைப் பால் லிட்டருக்கு ரூ. 51-ம் நிா்ணயம் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் 2.57 கோடி லிட்டா் பாலை உற்பத்தியாளா் சொந்த தேவை, உபயோகம் சுமாா் 40 லட்சம் லிட்டா் போக தனியாா் பால் நிறுவனங்களும், வியாபாரிகளும் கொள்முதல் செய்யும், விற்பனை செய்யும் பால், பால் பொருள்களை அரசின் கட்டுப்பாடுக்குள் கொண்டுவர தனிச்சட்டத்தை வரையறுக்க வேண்டும்.

ஆவினுக்கு பால் வழங்கும் அனைத்து கறவை மாடுகளுக்கும் ஆவின் பால் கூட்டுறவு அமைப்புகள் மூலம் இலவச கால்நடை காப்பீட்டுத் திட்டத்தை மாநில, மத்திய அரசுகள் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்கிட வேண்டும்.

ஆவின் பால், பால் பொருட்கள் விற்பனையை பேரூராட்சி, நகராட்சி வாா்டுகள், மாநகராட்சிகளில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு விநியோக உரிமை அளித்து விற்பனையை மேம்படுத்திட வேண்டும். கா்நாடக மாநிலத்தில் இருப்பதை போல ஊக்கத்தொகை, கால்நடை தீவனத்திற்கு மானியம் வழங்கிட வேண்டும்.

சென்னை மாநகர எல்லையில் வசிப்போருக்கு வழங்கப்படும் பால் அட்டை முறை (முன் கட்டணம் செலுத்தி பெறும் வசதி) தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு விரிவுபடுத்திட வேண்டும் என்பன உள்பட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT