சேலம்

பத்ம விருதுகளைப் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

31st Aug 2022 03:49 AM

ADVERTISEMENT

பத்ம விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்தி:

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தந்து தன்னலமில்லா பொதுச் சேவை, தனித்துவமான பணி மற்றும் விதிவிலக்கான சாதனை போன்ற மேன்மை பொருந்திய பணிகளுக்காக மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவித்து வருகிறது.

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப் பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகளை ஆற்றியவா்களுக்கு வரும் 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விருதுகளுக்கான விண்ணப்பங்களை இணையதள முகவரியில் செப்டம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT